ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் 5 டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது.
வரும் 19ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகக் களமிறங்கூடிய இந்திய அணியின் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது.
அதில் ஒருநாள் போட்டிகளுக்குச் சுப்மன் கில் கேப்டனாகவும், ஸ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் தலைமையில் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் உள்ளிட்டோர் களமிறங்குவார்கள் என பிசிசிஐ அறிவித்திருக்கிறது.
இதேபோல, டி-20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் செயல்படுவார் என அறிவித்த பிசிசிஐ, ஷிவம் துபே, அக்சர் படேல், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் டி-20 தொடரில் களமிறங்குவார்கள் என அறிவித்துள்ளது.