இந்திய ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படாதது அதிர்ச்சி அளிப்பதாக இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் தொடரை முடித்தபின்னர் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.
இதில் ஒருநாள் அணிக்குச் சுப்மன் கில் கேப்டனாகவும், ஸ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள ஹர்பஜன் சிங், ஒயிட் பால் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் ரோகித் சர்மா இந்திய கிரிக்கெட்டின் தூண்களில் ஒருவராக இருந்து வருகிறார் என கூறினார்.
மேலும், குறைந்தபட்சம் இந்தத் தொடருக்காவது அவருக்குக் கேப்டன் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.