குஜராத்தில் 80 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.
குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தின் வேராவல் நகரில் அதிகாலையில் 3 மாடி கட்டடமொன்றின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
இதில் அந்த வழியாக வாகனத்தில் சென்றவர் உட்பட மூவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புபடையினர், விபத்தில் படுகாயமடைந்த இருவரை பத்திரமாக மீட்டனர்.