மயிலாடுதுறை மகப்பேறு மருத்துவமனை கட்டடம் இடிக்கும் நடவடிக்கைக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், தருமபுரம் ஆதீனம் மற்றும் பாஜகவினரின் கடும் எதிர்ப்புகளால் கடந்த 2 ஆண்டுகளாக பேசாமல் இருந்த மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம், தற்போது மீண்டும் மருத்துவமனை கட்டடத்தை இடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன என தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு குப்பைமேடு அமைக்க வேண்டுமென்றால், திமுகவினர் ஆக்கிரமித்து வைத்திருக்கும் அரசு புறம்போக்கு நிலங்களை மீட்டு அதில் அமைத்துக் கொள்ள வேண்டும் என கூறியுள்ள அண்ணாமலை, தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான இடத்தில் அமைந்திருக்கும் மருத்துவமனை கட்டடத்தை இடித்துவிட்டு, அதில் குப்பைமேடு அமைக்க முடிவெடுத்திருப்பது திமுக அரசின் வழிப்பறி என விமர்சித்துள்ளார்.
கோயில் மற்றும் ஆதீன சொத்துக்களை அத்துமீறி ஆக்கிரமிப்பதை திமுக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ள அண்ணாமலை, மயிலாடுதுறை இலவச மருத்துவமனை அமைந்திருக்கும் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இடத்தை உடனடியாக அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும் பதிவிட்டுள்ளார்