கரூர் துயர சம்பவம் தொடர்பாக நீதிமன்ற காவலில் உள்ள தவெக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகனிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய், கடந்த 27ஆம் தேதி மேற்கொண்ட பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக, தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மாநகர நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்குச் சிறப்பு புலனாய் குழுவிற்கு மாற்றப்பட்டதால், மதியழகனிடம் விசாரணை நடத்த 5 நாள் அனுமதி கேட்டு, கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதற்குத் தவெக தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.