திருப்பரங்குன்றம் மலையில் அசைவு உணவு சாப்பிட்டவர்களுக்கு நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடவோம் என்று கூறி அசைவு உணவு சாப்பிட்டவர்களுக்கு நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் திருப்பரங்குன்றம் வழக்கில் 2 நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்புக்குப் பிறகு, 3வது நீதிபதி இன்று தீர்பளித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, அதனைப் பலியிடத் தடை விதித்து உத்தரவிட்டார். அந்த மலையை திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையின் மரபுகளை அழிக்க துடித்த திமுக அரசுக்கு எதிராக மதுரை முருகர் மாநாட்டில் தமிழகமே ஒன்று திரண்டது. இந்துக்களின் ஒற்றுமையை எதிரொலித்து. தர்மம் வென்றது தற்போது சட்டத்தின் வாயிலாக நீதி வென்றுள்ளது என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.