சென்னையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக திருமாவளவனை தமிழக அரசு கைது செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார்.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆணவ படுகொலைகள் பற்றி பேசும் திருமாவளவன் ஆணவம் கொண்ட அரசியல்வாதி என தெரிவித்தார்
தமிழகத்தில் தெருப் பெயர்களில் சாதி பெயர்களை எடுத்தாலும் உணர்வுகளை மாற்ற முடியாது என்றும், “பள்ளிகளில் சாதியை கொண்டு வந்தது திமுகதான் என்றும் சாடினார்.
விஜய் கரூர் செல்வதற்கு உரிமை உள்ளதகாவும், காவல்துறையிடம் அனுமதி கேட்டு காத்திருக்க தேவையில்லை என்றும் ஹச்.ராஜா குறிப்பிட்டார்.