நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியில் இரு பிரிவுகளாக மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிகாம் படிக்கும் மாணவர்கள் இருவர் இடையே விடுதியில் பகுதி நேர வேலை செய்வது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் சகமாணவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து மோதிக்கொண்டுள்ளனர். தகவலறிந்து சென்ற போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.