இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, தனது 3வது காதலியை அறிமுகம் செய்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார்.
இவருக்குக் கடந்த ஆண்டு ஜூலை மாதமே நடாஷா ஸ்டான்கோவிக் உடன் விவாகரத்தானது.
ஹர்திக் பாண்டியா தனது திருமண உறவில் இருந்து பிரிவதற்கு முன்பாகவே, பிரிட்டன் மாடலான ஜாஸ்மின் வாலியா என்பவருடன் காதல் உறவில் இருந்து வந்தார்.
ஓராண்டாக ஜாஸ்மின் வாலியாவுடன் ஹர்திக் பாண்டியா உறவில் இருந்து வந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இருவருக்கும் பிரேக் அப் ஆனது இந்நிலையில் தற்போது ஹர்திக் பாண்டியா, மாடலிங் துறையில் ஜொலிக்கும் மஹிகா சர்மாவுடன் காதலில் விழுந்துள்ளார்.
இதனைத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் ஹர்திக் பாண்டியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பிரேக் அப் ஆன 2 மாதங்களுக்குள் ஹர்திக் பாண்டியா அடுத்த காதலில் விழுந்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.