ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள தமிழக காவிரி எல்லையான ஒகேனக்கல் பிலிகுண்டு பகுதிக்கு வருகின்ற நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துள்ளது. தற்போது 57 ஆயிரம் கனஅடி நீர் வரத்து உள்ள நிலையில், ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.