சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இ-மெயில் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் பள்ளி, கல்லூரி, ஆளுநர் மாளிகை மற்றும் தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தொடர்ந்து இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுவது தொடர் கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இரவு 9.55 மணிக்கு LTTE TOSIS – Pakistan ISI Nexus என்ற பெயரில் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து, ஆளுநர் மாளிகை அதிகாரிகள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை மேற்கொண்டனர். 4 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தியதில் அது வதந்தி என தெரியவந்தது. பின்னர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.