விசாகப்பட்டினம் மைதானத்தில் மிதாலி ராஜ் பெயரில் கேலரி திறக்கப்பட்டுள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கு பெரும் பங்காற்றிய ஆந்திராவைச் சேர்ந்த மிதாலிராஜ் மற்றும் ரவி கல்பனா ஆகியோரது பெயரை சூட்ட வேண்டும் என ஸ்மிர்தி மந்தனா, அமைச்சர் நாரா லோகேசுக்கு கோரிக்கை விடுத்தார்.
இதை ஆந்திர அரசும் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து மிதாலி ராஜ், ரவி கல்பனாவை கவுரவிக்கும் வகையில் அவர்களது பெயர் சூட்டப்பட்ட கேலரிகள் விசாகப்பட்டினம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் திறக்கப்பட்டன.