தமிழகத்தில் பல ஊராட்சிகளில் இணையதள வசதி இல்லாதது, முதலமைச்சர் நடத்திய கிராமசபை கூட்டம் வாயிலாக அம்பலமாகி உள்ளது.
தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில் கடந்த 2-ம் தேதி நடைபெற வேண்டிய கிராம சபை கூட்டம், நேற்று முன்தினம் நடைபெற்றது.
12 ஆயிரத்து 480 ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பல்வேறு ஊராட்சிகளில் மக்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடினார். இந்த நிலையில், இணைய வசதி இல்லாதது, மின் தடை உள்ளிட்ட காரணங்களால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் முதலமைச்சரின் பேச்சை நேரடி ஒளிபரப்பு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதன் வாயிலாக, தமிழகத்தின் பல ஊராட்சிகளில் இணைய வசதி இல்லாதது தெரியவந்துள்ளது.