எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம் - ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள்!
Oct 13, 2025, 07:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம் – ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள்!

Web Desk by Web Desk
Oct 13, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை வியாசர்பாடி கணேசாபுரம் மேம்பால பணிகள் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகியும் பணிகள் மந்த நிலையில் நடைபெறுவதால் அப்பகுதி வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் பாலத்தைக் கடந்து செல்லவே சிரமப்படும் நிலையில், பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பருவ மழையின்போது சென்னை மாநகரில் மழை நீரால் தத்தளிக்கும் பகுதிகளில் மிக முக்கியமான பகுதி தான் வட சென்னை. வடசென்னையின் கணேசபுரம் சுரங்கப்பாதை மழை நீரால் மூழ்குவதையும் அப்பகுதி மக்கள் படும் துயரத்தினையும் ஆண்டுதோறும் பார்க்க முடிகிறது.

வியாசர்பாடி, கொளத்தூர், மாதவரம், கொடுங்கையூர், கண்ணதாசன் நகர், மகாகவி பாரதியார் நகர், மூலக்கடை ஆகிய பகுதிகளுக்குச் செல்வதற்கு வியாசர்பாடி கணேசபுரம் ரெயில்வே சுரங்கப்பாதையை கடந்து செல்ல வேண்டும் என்ற சூழலால் போக்குவரத்து நெரிசலும் அதிகளவு ஏற்படுகிறது.

பொதுமக்கள் சந்திக்கும் சிரமங்களை தவிர்க்கும் வகையில் 226 கோடி ரூபாய் செலவில் 600 மீட்டர் தூரத்திற்கு கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. 50 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்த நிலையில், மீதமிருக்கும் பணிகள் எப்போது முடியும் என அப்பகுதி மக்களும், வியாபாரிகளும் மிகுந்த ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

கணேசபுரம் மேம்பால திட்டம் தொடங்கிய நாட்களில் மகிழ்ச்சியாக இருந்த பகுதி மக்கள், ஆமை வேகத்தில் நடந்து வரும் பணிகளை கண்டு மிகுந்த அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மீண்டும் மழையால் தத்தளிக்கும் அவல நிலையை நினைத்து அவர்கள் வேதனையடைந்துள்ளனர்.

வருடக்கணக்கில் நடைபெறும் பணிகளால் அப்பகுதிகளில் கடை வைத்துள்ள வியாபாரிகளும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதில் தொடங்கி, மருத்துவமனைக்குக் கூடப் பல கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய சூழலுக்குப் பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆமை வேகத்தில் நடைபெறும் பணிகளை விரைவுபடுத்தி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே பணிகளை முடிக்க வேண்டும் எனப் பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: கணேசபுரம் மேம்பாலம்மேம்பால பணிகள்newsTodayசென்னை வியாசர்பாடிWhen will the Ganeshapuram flyover be put into service - people are eagerly waiting
ShareTweetSendShare
Previous Post

திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி – எல். முருகன்

Next Post

மேற்கு வங்கத்தில் தொடரும் பாலியல் கொடூரம் : கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு!

Related News

மேற்கு வங்கத்தில் தொடரும் பாலியல் கொடூரம் : கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு!

திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி – எல். முருகன்

கரூர் நெரிசல் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

பிரபாகரன் மீது சிறு கீறல் விழுந்தாலும் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் – அதிமுக

நானே குறுக்கு விசாரணை செய்வேன் – அண்ணாமலை

அண்ணாமலைக்கு எதிராக டி.ஆர் பாலு தொடர்ந்த வழக்கு : குறுக்கு விசாரணை செய்ய அண்ணாமலைக்கு அனுமதி – நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம் – ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள்!

8 மாதங்களில் 8 போர்களை நிறுத்தியுள்ளேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

லண்டனின் தொழிலதிபர் வினோத் சேகர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் : துணிச்சலுடன் போராடி காப்பாற்றிய மனைவி!

இஸ்ரேல்- காசா இடையேயான போர் நிறுத்தம் அமல்!

சீனாவின் ஜாங்ஜோ அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி பணிகள் தொடக்கம்!

சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை நிகழவில்லை – முகமது யூனுஸ்

லக்னோவில் இனிப்பு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மீது ஓடிய எலி!

தவெக மாவட்ட செயலாளர் உள்பட 2 பேரின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

ஒன்றும் செய்யாத தவெகவினரை தீவிரவாதிகள் போல காவல்துறையினர் தடியடி நடத்தினர் – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!

அரிய தாதுக்கள் ஏற்றுமதிக்கு தடை : சீனாவிற்கு 100% வரி விதிப்பு – ருத்ரதாண்டவமாடும் ட்ரம்ப!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies