கரூர் சம்பவத்தில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளதாகப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம் பிரச்சாரத்தின் ஒருபகுதியாகக் காரைக்குடியில் பேசியவர்,
திராவிட மாடல் அரசை விரட்ட வேண்டும் என்றும் அதற்காகப் பிரகடனம் மேற்கொள்ள வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் எனப் பிரகடனம் மேற்கொள்ள வேண்டும் என்றும் திமுக ஆட்சியை அகற்றவே அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம் என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.
காவல்துறை அதிகாரிகள் நியாயமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் பரப்புரை மேற்கொள்ளக் காவல்துறையினர் உரிய அனுமதி வழங்குவதில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
கரூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது என்று தலைகுனிந்து நிற்கிறது தமிழக அரசு என்று நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.
கரூர் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.