இந்தியா சிறந்த நாடு எனவும், அந்நாட்டின் பிரதமர் மோடி தனது சிறந்த நண்பர் எனவும் காசா அமைதி உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி முன்னிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த உச்சி மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், என் நல்ல நண்பர்கள் என்ற பட்டியலில் உச்சத்தில் இருப்பவர் பிரதமர் மோடி எனவும், பாகிஸ்தானும், இந்தியாவும் மிகவும் நன்றாக வாழப்போகிறார்கள் என்று நினைப்பதாகவும் கூறினார்.