தொழில் முதலீடுகள் விவகாரத்தில் திமுக அரசின் புளுகு, அரை நாளில் அம்பலமானதாகப் பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில், ஃபாக்ஸ்கான் நிறுவனம் 15 ஆயிரம் கோடியில் புதிய முதலீடு செய்யவுள்ளதாக, அரசு கூறியிருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆனால் ஃபாக்ஸ்கான் நிறுவனம், தமிழ்நாட்டில் எந்தப் புதிய முதலீட்டையும் செய்யவில்லை என மறுப்பு தெரிவித்ததையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.
இதன்மூலம் தொழில் முதலீடுகள் விவகாரத்தில் திமுக அரசின் புளுகு அரை நாளில் அம்பலமானதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
கடந்த ஆண்டில் அமெரிக்காவுக்குச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் கூகுள் நிறுவனத்தின் முதலீடுகள் தமிழ்நாட்டில் குவியப் போவதாகக் கூறியதை மேற்கோள்காட்டிய அவர்,
கூகுள் நிறுவனம் தனது ஏஐ மையத்தை விசாகப்பட்டினத்தில் அமைக்கப் போவதாக அறிவித்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
தொழில் முதலீடுகள் விவகாரத்தில் தொடர்ந்து பொய்யான தகவல்களை வழங்கி மக்களைத் திமுக அரசு ஏமாற்றி வருவது கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ள அன்புமணி,
திமுக அரசின் மோசடிகளை ஆதாரங்களுடன் கூடிய ஆவணமாக வெளியிட்டு அம்பலப்படுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.