உத்தரபிரதேசத்தில் புளித்துப் போன 2 ஆயிரத்து 600 கிலோ ரஸகுல்லாவை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
தீபாவளி நெருங்கி வரும் சூழலில் பொதுமக்கள் பலரும் புத்தாடைகள், இனிப்புகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நடுத்தர மக்களைக் குறிவைத்து தரமற்ற இனிப்பு பொருட்கள் சந்தையில் விற்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டத்தின் ஷிகார்பூரில் இனிப்புகள் தயாரிக்கும் இடத்தில் உணவுப் பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பாதுகாப்பற்ற முறையில் தயாரிக்கப்பட்டிருந்த புளித்துப்போன 2 ஆயிரத்து 600 கிலோ ரஸகுல்லாவைக் கைப்பற்றி அழித்தனர். இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.