மகாராஷ்டிராவில் முக்கிய தளபதி உள்பட 60 மாவோயிஸ்டுகள் சரண் அடைந்துள்ளனர்.
மகாராஷ்டிராவின் கட்சிரோலி பகுதியில், இடதுசாரி மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தளபதி வேணுகோபால் ராவ் தனது ஆதரவாளர்கள் 60 பேருடன் போலீசில் சரணடைந்தார்.
சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நக்சல்கள் ஆதிக்கம் உள்ள நிலையில், 2026ஆம் ஆண்டு மார்ச்சுக்குள் நக்சல்களை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
நக்சல் செயல்பாடுகளைக் கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையை மத்திய அரசுடன், அந்தந்த மாநில அரசுகளும் மேற்கொண்டு வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலி பகுதியில், தடைச் செய்யப்பட்ட நக்சல் அமைப்பின் தளபதி சோனு என்ற மல்லோஜுலா வேணுகோபால் ராவ் போலீசில் சரணடைந்தார்.
நக்சல் இயக்கத்தில் உட்பூசல் ஏற்பட்டதால் பதவியை ராஜினாமா செய்த வேணுகோபால், இயல்பு வாழ்கைக்குத் திரும்ப முடிவு செய்து, தனது ஆதரவாளர்கள் 60 பேருடன் போலீசில் சரணடைந்துள்ளார்.
மேலும், கட்சிரோலி பகுதியில் வைத்திருந்த ஆயுதங்களையும் போலீசாரிடம் வேணுகோபால் ராவ் ஒப்படைத்தார்.