மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடமாநில மக்களுக்கு நிவாரண உதவி திரட்டும் நோக்கில் டெல்லியில் வரும் 18ம் தேதி முதல் “சனாதனி” கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
பஞ்சாப், ஹரியானா, இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த மாதம் கனமழை பெய்தது. மழை, வெள்ளத்தால் அம்மாநில மக்கள் பலர் வீடுகள், உடமைகளை இழந்துள்ளனர்.
இந்தநிலையில் அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் வகையில், “சனாதன நியாஸ்” அறக்கட்டளையின் கீழ் ஆன்மிக தலைவர்கள் பங்கேற்கும் சனாதனி கிரிக்கெட் லீக் போட்டியை டெல்லியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் ‘பிருந்தாவன் வாரியர்ஸ், பஜ்ரங் பிளாஸ்டர்ஸ் உள்ளிட்ட 4 அணிகள் பங்கேற்க உள்ளன. டெல்லி பாஹர்கஞ்ச் பகுதியில் உள்ள மைதானத்தில், வரும் 18ம் தேதி முதல் இப்போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கிடைக்கும் அனைத்து தொகையும் வெள்ள நிவாரண பணிக்கு செல்லும் என சனாதன நியாஸ்” அறக்கட்டளை தெரிவித்துள்ளது.