ஒரு வாரத்தில் முடிய வேண்டிய போர் 4 வருடமாகத் தொடர்கிறது என ரஷ்ய அதிபர் புதினை டிரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார்.
இதுகுறித்து அமெரிக்காவில் செய்தியாளகளிடம் பேசிய டிரம்ப், விளாடிமிர் புதின் இந்தப் போரை ஏன் தொடர்கிறார் எனத் தனக்கு தெரியவில்லை எனக் கூறினார்.
ஒரு வாரத்தில் வெல்ல வேண்டிய போரை 4 வருடங்களாக விளாடிமிர் புதின் தொடர்ந்து வருகிறார் எனவும் டிரம்ப் விமர்சித்தார்.
இந்தப் போரால் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிகப்பெரிய உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.