பீகாரில் வரும் சட்டமன்ற தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக எழுந்த அதிருப்தி காரணமாக அம்மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லவாரு மற்றும் அவரது ஆதரவாளர்கள்மீது தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.
பீகார் காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லவாரு, மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் ராம் ஆகியோர் டெல்லியில் இருந்து பாட்னா திரும்பினர்.
அப்போது விமான நிலையத்தில் கூடியிருந்த தொண்டர்கள், தொகுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர்களை தாக்க முயன்றனர்.
உடனே சுதாரித்துக்கொண்ட அல்லவாரு அங்கிருந்து தப்பியோடிய நிலையில், அவரது ஆதரவாளர்கள் சிலரை தொண்டர்கள் சரமாரியாகத் தாக்கினர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.