மலேசியாவில் தனது 3 குழந்தைகளையும் பைக்கில் அமர வைத்துக் கொண்டு உணவு டெலிவரி செய்யும் பெண்ணின் தன்னம்பிக்கை வியக்க வைத்துள்ளது.
மலாக்காவை சேர்ந்தவர் நோரியானி சயாகிரா யாகோப். கணவர் வேலைக்குச் செல்வதால் 3 குழந்தைகளையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு அவருக்கு உள்ளது.
அதேநேரம் கணவரின் வருமானம் குறைவாக இருப்பதால் தானும் வேலைக்குச் செல்ல வேண்டும் என முடிவெடுக்கிறார் நோரியானி.
இந்நிலையில் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த அவர், தனது 3 குழந்தைகளையும் பைக்கில் அமரவைத்துக் கொண்டு பணிக்குச் சென்று வருகிறார்.
மூத்த மகனை பள்ளிக்கு அனுப்பிய பிறகு 2 குழந்தைகளுடன் உணவு டெலிவரி செய்து வருகிறார்.
இதுகுறித்து பேசிய நோரியானி, எல்லா இடங்களுக்கும் தனது குழந்தைகளை அழைத்துச் செல்வதால் அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடிவதாகக் கூறுகிறார்.
இந்த நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி நெட்டிசன்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.