கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் சாலை பாதுகாப்பை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், ஜி.டி.நாயுடு மேம்பாலம் தொடங்கும் உப்பிலிபாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, கோவையில் உள்ள தொழிலதிபர்கள், பொதுமக்களின் கோரிக்கையின்படி உயர்மட்ட பாலத்திற்கு ஜி.டி.நாயுடு என பெயர் வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
ஜி.டி.நாயுடு பாலத்தில் கார்கள் வேகமாக செல்வதை தடுக்க லப்பர் ஸ்பீடு பிரேக்கர் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், பாலம் தொடங்கும் இடத்திலும் சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உப்பிலிபாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.