கடலூர் மாவட்டம் கழுதூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த கனிதா, சின்னப்பொன்னு, ராஜேஸ்வரி, பாரிஜாதம் ஆகிய 4 பெண்கள், மின்னல் தாக்கியதில் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அத்தோடு, உயிரிழந்த பெண்களின் குடும்பத்திற்குத் தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.