திமுக அரசின் அலட்சியத்தால் வெள்ளத்தில் தத்தளிக்கும் தேனி - நயினார் நாகேந்திரன்
Oct 19, 2025, 08:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக அரசின் அலட்சியத்தால் வெள்ளத்தில் தத்தளிக்கும் தேனி – நயினார் நாகேந்திரன்

Web Desk by Web Desk
Oct 19, 2025, 06:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அரசின் அலட்சியத்தால் வெள்ளத்தில் தேனி தத்தளிக்கிறது என்று  பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

எழில் கொஞ்சும் தேனி மாவட்டம், தற்போது கடும் வெள்ளத்தில் சிக்கி அவதியுறுவதைக் கண்டு நெஞ்சம் பதைபதைக்கிறது. வரலாறு காணாத தொடர் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும் இது ஒரு விதத்தில் திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனிதப் பேரிடரே.

பருவ மழை துவங்கும் முன்பே, கால்வாய்களைத் தூர்வாரி, நீர்நிலைகளைப் பேணி இருந்தால் இது போன்றதொரு பேரிடர் ஏற்பட்டிருக்குமா? பருவ மழையை முன்கூட்டியே கணித்து உரிய முன்னேற்பாடுகளைச் செய்து, மக்களை எச்சரித்து இருந்தால், இது போன்ற சேதம் தான் ஏற்பட்டிருக்குமா? முல்லைப் பெரியாறு அணையில் நான்கு நாட்களுக்கு முன்பு வரை 1,000 கன அடி நீர் மட்டுமே திறந்துவிடப்பட்ட நிலையில், நேற்று இரவு மட்டும் தமிழக நீர்வளத்துறையால் 7,163 கன அடி நீர் திறந்துவிடப்பட்டிருப்பது தான் வெள்ளத்திற்கான காரணமோ என்ற சந்தேகமும் எழுகிறது.

மொத்தத்தில் திமுக அரசின் அலட்சியத்தால் நள்ளிரவில் தங்கள் வீடுகளை இழந்தும், கால்நடைகளைப் பறிகொடுத்தும், வயல்வெளிகள் சேதமாகியும் வாழ்வாதாரமின்றி மக்கள் தவிக்கும் போது, மீட்புப்பணியைத் துரிதப்படுத்தாமல் மெத்தனமாக இருக்கிறது விளம்பர மாடல் அரசு.

முதல்வர்  ஸ்டாலின்  உடனடியாகத் தேனி விரைந்துச் சென்று போர்க்கால அடிப்படையில் வெள்ள பாதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பாக மக்களை வைத்திட முகாம்கள் அமைக்க வேண்டும். மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்கி கைகொடுக்க வேண்டும் என திமுக அரசை நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

Tags: DMKTheni is reeling under floods due to DMK government's negligence - Nayinar Nagendranbjp
ShareTweetSendShare
Previous Post

காசாவில் போர் முடிவடையாது – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

Next Post

தீபாவளி கொண்டாட்டம் : மடிக்கணினியில் வேலை பார்த்தபடியே நடனமாடிய ஊழியர்!

Related News

கண்கவர் செட்டிநாடு கைத்தறி சேலைகள் : தீபாவளிக்கு இத்தனை டிசைன்களா? – சிறப்பு தொகுப்பு!

தித்திக்கும் தீபாவளிக்கு ‘தேனூறும் ஜிலேபி’ ரெடி!

தித்திக்கும் தீபாவளிக்கு ஆற்காடு ஸ்பெஷல் “மக்கன் பேடா”!

தீபாவளிக்கு ரெடியாகும் செட்டிநாட்டு பலகாரங்கள்!

சுடச்சுட தீபாவளி பலகாரங்கள் – தயாரிக்கும் 500 பெண்கள்!

இந்தி கற்பதை வேண்டாம் என சொல்ல மாட்டோம் – சேகர்பாபு

Load More

அண்மைச் செய்திகள்

OP SINDOOR வெறும் டிரைலர்தான் : பிரம்மோஸ் வளையத்தில் பாகிஸ்தான் – ராஜ்நாத சிங்!

படுக்கை வசதிக்கொண்ட வந்தே பாரத் ரயில் – ஆடம்பர சொகுசு பயணம்!

தீபாவளி கொண்டாட்டம் : மடிக்கணினியில் வேலை பார்த்தபடியே நடனமாடிய ஊழியர்!

திமுக அரசின் அலட்சியத்தால் வெள்ளத்தில் தத்தளிக்கும் தேனி – நயினார் நாகேந்திரன்

காசாவில் போர் முடிவடையாது – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

சீனா : பெண்கள் மத்தியில் வேகமெடுத்து வரும் கென்ஸ் கலாச்சாரம்!

அமெரிக்கா : 1,500 அடி உயரத்திற்கு தீக்குழம்பை வெளியேற்றும் கிலாவியா எரிமலை!

கேரளா : கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்து!

திருவாசகம் பதிகம் பாட தடை விதிக்கப்பட்டதற்கு இந்து முன்னணி அமைப்பினர் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies