உலகின் மிகப் பெரிய இராணுவ போக்குவரத்து விமான தயாரிப்பில் சீனா - சிறப்பு தொகுப்பு !
Oct 21, 2025, 03:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் மிகப் பெரிய இராணுவ போக்குவரத்து விமான தயாரிப்பில் சீனா – சிறப்பு தொகுப்பு !

Web Desk by Web Desk
Oct 20, 2025, 01:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விமானப்படைக்கு அதிகம் செலவழித்து உலகின் மிகப்பெரிய விமானப் படையை அமெரிக்கா வைத்திருக்கிறது. அமெரிக்க விமானப்படையில் 13000 க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், 5500க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் உள்ளன. மேலும், 2,643 போர்ப் பயிற்சி விமானங்கள்,2085 ஜெட் விமானங்கள்,945 போக்குவரத்து விமானங்களை அமெரிக்க வைத்துள்ளது.

இது அமெரிக்காவுக்கு அடுத்த 7 நாடுகள் வைத்துள்ள மொத்த விமானப்படைகளின் அளவை விட பெரியது ஆகும்.

அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக ரஷ்யாவின் விமானப்படை, சுமார் 4,292 போர் விமானங்களுடன் இரண்டாவது இடத்தில உள்ளது. சீனாவைப் பின்னுக்குத் தள்ளி, உலக அளவில் மூன்றாவது சக்தி மிக்க விமானப்படையாக இந்திய விமானப்படை உள்ளது.
புவிசார் அரசியல் மாற்றங்களின் வெளிப்பாடாக, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்கள் இராணுவப் பலத்தை மேம்படுத்தி வருகின்றன.

குறிப்பாக அமெரிக்காவுக்குப் போட்டியாக, போர் விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள், போக்குவரத்து விமானங்கள், வான்வழி முன்னெச்சரிக்கை விமானங்கள், அதிநவீன ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் என சீனாவின் மக்கள் விடுதலை இராணுவ விமானப்படை முன்னேறி வருகிறது.

உலக அளவில் மிகப் பெரிய இராணுவப் போக்குவரத்து விமானத்தை அமெரிக்காவே வைத்துள்ளது. அமெரிக்காவின் சி-5 கேலக்ஸி விமானம், பாதுகாப்பு துறைக்கான சரக்கு மற்றும் பணியாளர்களைக் கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டதாகும். C-5M சூப்பர் கேலக்ஸி விமானம், 28 சக்கரங்கள், நான்கு ஜெனரல் எலக்ட்ரிக் இன்ஜின்கள் கொண்டதாகும். இந்த விமானம், 4,800 கடல் மைல்கள் வரை பறக்கக் கூடியதாகும்.

இந்நிலையில் தான், அடுத்த தலைமுறைக்கான உலகின் மிகப்பெரிய இராணுவ போக்குவரத்து விமானத்தை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது. இதற்கான blended wing body வடிவமைப்பு வரைபடம் வெளிவந்துள்ளது.

இந்த விமானம், எரிபொருள் நிரப்பாமல் 6,500 கிலோமீட்டருக்கு மேல் 120 மெட்ரிக் டன் வரை சரக்குகளை எடுத்துச் செல்லும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது
இது, அமெரிக்காவின்C-5M சூப்பர் கேலக்ஸி மற்றும் உக்ரைனின் அன்டோனோவ் An-124 விமானத்தை விடவும் பெரியதாகும்.

ஏற்கெனவே சீனாவிடம் 4,500 கிலோமீட்டருக்கு மேல் 66 டன்களைச் சுமந்து செல்லும் திறன் உடைய கனரக விமானமான Y-20 போர் விமானம் உள்ளது. சீனா உருவாக்கும் புதிய விமானம் Y-20 யை விட இரண்டு மடங்கு சுமை திறனுடன், 40 சதவீதத்துக்கும் அதிகமாக வரம்பைக் கொண்டுள்ளது.

தைவான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் மீது படையெடுப்பதற்கும், தனது பெல்ட் அண்ட் ரோடு திட்டங்களுக்கு அவசர காலங்களில் உதவுவதற்கும் இந்த புதிய விமானம் பயன்படும் என்று கூறப் படுகிறது.

சுமார் 80க்கும் மேற்பட்ட Y-20 விமானங்களை வைத்துள்ள சீனா, உலகின் மிகப் பெரிய இராணுவ போக்கு வரத்து விமானத்தை உருவாக்கி, இராணுவப் பலத்தில் அமெரிக்காவை விடவும் ஒரு படி முன்னேறியுள்ளது.

இதற்கிடையே, பிரதமர் மோடியின் ‘ஆத்மநிர்பர் பாரத்’ திட்டத்தின் கீழ், மஹிந்திரா குழுமமும் பிரேசிலின் எம்ப்ரேயர் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நிறுவனமும் C-390 மில்லினியம் இராணுவ போக்குவரத்து விமானத்தை இந்தியாவில் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
26 டன் எடையை சுமந்து 470 கடல் மைல் வேகத்தில் பறக்கக்கூடிய C-390 மில்லினியம் விமானம், சரக்கு மற்றும் துருப்பு போக்குவரத்து, வான்வழி எரிபொருள் நிரப்புதல், மருத்துவ வெளியேற்றம், தீயணைப்பு மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Tags: fighter jetsUS Air Forcechina fighter jetsUS C-5 Galaxy aircraft i80 Y-20 aircraft
ShareTweetSendShare
Previous Post

திக்…திக்..பக்..பக்.. : சிதிலமடைந்த குடியிருப்புகள் – திகிலுடன் வாழும் மக்கள்!

Next Post

ஹிந்துக்களை அவமிதிக்கும் வகையில் தீபாவளி வாழ்த்து சொன்ன உதயநிதி – இந்து முன்னணி கண்டனம்

Related News

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

இப்படி ஒரு பகுதியா? சூரிய ஒளியே படாதாம் : 136 நாட்கள் இருளில் மூழ்கிய நூனாவுட்!

தொழிலாளர்களின் குமுறல் அடங்குமா? : சீனாவை துரத்தும் “35 வயது சாபம்”!

செயலிழந்த சிறுநீரகங்களுடன் 20 ஆண்டுகளாக வாழும் யோகி : தன்னலமற்ற வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு “பிரேமானந்த் ஜி மகராஜ்”!

கண்கவர் செட்டிநாடு கைத்தறி சேலைகள் : தீபாவளிக்கு இத்தனை டிசைன்களா? – சிறப்பு தொகுப்பு!

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

Load More

அண்மைச் செய்திகள்

சக்திவாய்ந்த விமானப்படை பட்டியலில் இந்தியா முன்னிலை… சீனாவை பின்னுக்கு தள்ளி உலகளவில் 3-ம் இடம்…!

ஐஎன்எஸ் விக்ராந் போர் கப்பலில் வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி – குடும்பத்தினருடன் கொண்டாடுவதாக பெருமிதம்!

பூமிக்கு அடியில் செல்லும் மின்சார வயரில் மின்கசிவு ; பட்டாசு போல வெடித்ததால் பரபரப்பு!

நடப்பாண்டில் 7வது முறையாக முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை!

இஸ்ரேல் காசா போர் நிறுத்தத்தை தொடர்ந்து எல்லைக்கோடு அமைக்கும் பணி தீவிரம்!

தொடரும் சீரமைப்பு பணி – உதகை மலை ரயில் 2வது நாளாக ரத்து!

பாகிஸ்தானை துரத்தும் பேரழிவு : மரண அடி கொடுக்கும் தாலிபான்களால் அலறல்!

திமுக எனும் அரக்கனை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் – எல்.முருகன் உறுதி!

தீபாவளி பண்டிகை – காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு!

இந்தியாவின் ராஜதந்திரம் : பாகிஸ்தானுக்கு சொல்லும் செய்தி என்ன? சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies