2025 குறுவை நெல் சாகுபடிக்கான கொள்முதல் எதிர்பார்த்ததை விட 50 சதவீதம் மட்டுமே நடந்துள்ளது என்பது புள்ளி விவரங்களின் படி தெரியவந்துள்ளது.
திருச்சி மாவட்டம் 6 ஆயிரத்து 450 ஹெக்டேர் சாகுபடி பரப்பளவு கொண்டது. இங்கு 30 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 19 ஆயிரத்து 604 மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் 79 ஆயிரம் ஹெக்டேர் சாகுபடி பரப்பளவு கொண்டது. இங்கு 3 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1 லட்சத்து 63 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் 77 ஆயிரத்து 593 ஹெக்டேர் சாகுபடி பரப்பளவு கொண்டது. இங்கு 2 லட்சத்து 90 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 1 லட்சத்து 96 ஆயிரத்து 332 மெட்ரிக் டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கடை மடை பகுதியான நாகை மாவட்டம் 30 ஆயிரத்து 100 ஹெக்டேர் சாகுபடி பரப்பளவு கொண்டது. இங்கு 1 லட்சத்து 37 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 67 ஆயிரத்து 815 மெட்ரிக் டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் 39 ஆயிரத்து 700 ஹெக்டேர் சாகுபடி பரப்பளவு கொண்டது. இங்கு 1 லட்சத்து 93 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 1 லட்சத்து 19 ஆயிரத்து 856 மெட்ரிக் டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் இந்த 5 மாவட்டங்களும் சேர்த்து 2 லட்சத்து 32 ஆயிரத்து 843 ஹெக்டேர் சாகுபடி பரப்பளவு கொண்டவையாகும். இதன் மூலம் 9 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் 5 லட்சத்து 66 ஆயிரத்து 607 மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
















