மதுரை மாநகரில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால், பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
மதுரையில் சிம்மக்கல், கோரிப்பாளையம், புதூர், செல்லூர், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால், செல்லூர் மீனாம்பாள்புரம் பகுதியில் மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது.
இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பள்ளி மாணவர்களும் அவதிக்குள்ளாகினர். மதுரை மாநகராட்சி, 60 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டதாக தகவல் வெளியிட்டது.
ஆனால் தமிழ் ஜனம் கள ஆய்வில் மழைநீர் கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை என கண்டறியப்பட்டது. ஆகையால், சாதாரண மழைக்கே மதுரை சாலைகள் மிதப்பதற்கு இதுவே காரணம் என குற்றம்சாட்டிய பொதுமக்கள், இனியாவது மழைநீர் தேங்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
















