“மாரி”யைப் பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை என முதலமைச்சரை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
மழையால் பாதிக்கப்பட்டு செய்வதறியாமல் நின்றுகொண்டிருப்பவர்களை சென்று சந்திக்காத முதலமைச்சர் ஸ்டாலின், மாரி செல்வராஜின் கைகளை பற்றிக் கொண்டிருப்பதாக விமர்சித்துள்ளார்.
பொது மக்களின் வாழ்க்கையை முதலமைச்சர் ஸ்டாலின் விளையாட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது எனத் தெரிவித்துள்ள அவர், “மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சரின் இந்தச் செயல்களுக்கு 2026 பதில் சொல்லும் என பதிவிட்டுள்ளார்.
















