கனமழை காரணமாக வரத்து குறைந்ததால் சேலத்தில் காய்கறி விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
கனமழை காரணமாகத் தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விளைச்சல் குறைந்துள்ளன.
இதனால் சேலத்தில் காய்கறி வரத்து குறைந்து, விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி கிலோ 25 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது 70 ரூபாய் வரை விற்பனையாகிறது.
இதேபோல் கிலோ 15 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்பட்ட கத்திரிக்காய் தற்போது 55 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
















