கனமழை காரணமாக பள்ளிக்கரணை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மோன்தா புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக பள்ளிக்கரணை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேளச்சேரி – மேடவாக்கம் சாலையின் பள்ளிக்கரணை முதல் நாராயணபுரம் வரை வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் கொட்டு மழையில் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
போக்குவரத்து காவலர்கள் பணியில் இல்லாததாலும், சாலைகள் சேதமடைந்து காணப்படுவதாலும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
















