விவசாயிகளின் கடின உழைப்பால் விளைவிக்கப்பட்ட நெல் மணிகளை பாதுகாக்க திமுக அரசு தவறிவிட்டதாக தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கனமழையால் நெல்மணிகள் முதல்முறை வீணான போதே, துரிதமாக செயல்பட்டு மீதமுள்ள நெல்மணிகளை தமிழக அரசு பாதுகாத்திருக்க வேண்டாமா என வினா எழுப்பியுள்ளார்.
விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்று, பணத்தை கையில் பார்த்து விடாமல் தடுப்பதே முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் நோக்கமாக இருந்து வருகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது என விஜய் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் பெய்த மழையால் நெல்மணிகள் நனைந்து சேதமடைந்த நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு திமுக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகி மூட்டையிலேயே முளைத்தது போல்,
திமுக அரசு மீதான எதிர்ப்பும் மக்கள் மனங்களில் இன்னும் வலுவாகி வருவதாகவும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் மக்கள் விரோத திமுக ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதியாகியுள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார்.
















