திருவள்ளுர் மாவட்டத்தில் கனமழை காரணமாக நத்தமேடு ஏரி நிரம்பியதால், குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
நத்தம்பேடு பகுதியில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், வெள்ளம் சூழ்ந்து மக்கள் பரிதவித்து வருகின்றனர். முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால், வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் அவதியடைந்தனர்.
இந்நிலையில், பாதிப்புகள் குறித்து செய்தி அறிந்த மாவட்ட ஆட்சியர் பிரதாப், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த நிலையில், அவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதனிடையே வேலூர் மாவட்டத்தின் மோர்தானா அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர், குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊராட்சிமன்ற நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காத நிலையில் மாவட்ட நிர்வாகம் வெள்ள நீரை அகற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















