2026 தேர்தலில் ஆட்சி மாற்றம் உறுதி என்றும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவார் என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்கத்துடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பகுதியில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின்போது அதிமுக முன்னாள் அமைச்சர் நந்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய நயினார் நாகேந்திரன், கொடைக்கானலுக்கு பல்நோக்கு மருத்துவமனை அமைப்பதாக கூறிய திமுக அரசு, மாறாக இ-பாஸ் முறை தான் அமல்படுத்தியது என தெரிவித்தார்.
கேரள அரசு பிஎம் ஸ்ரீபள்ளிகளுக்கு அனுமதியளித்து கையொப்பமிட்டதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பதாக குற்றம்சாட்டினார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சாராவார் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் பிரித்தாளும் சூழ்ச்சி செய்கிறார் எனவும் நயினார் நாகேந்திரன் கூறினார்.
















