சென்னை தலைமைச் செயலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
பீகார் சட்டமன்றத் தேர்தலையொட்டி அண்மையில் அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவிப்பு வெளியிட்டார்.
அது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 12 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
















