தமிழ்நாட்டில் கடுமையாக உழைக்கும் பீகார் மக்களை திமுக துன்புறுத்துகிறது எனப் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.
பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி சாப்ரா பகுதியில் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
இதனிடையே நாட்டின் வளர்ச்சிக்காகப் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வருவதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார்.
கர்நாடகாவில் உள்ள பீகார் மக்களை காங்கிரஸ் தலைவர்கள் அவமதிப்பதாகவும், தமிழ்நாட்டில் திமுகவினர் துன்புறுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதனைக் கண்டிக்காமல் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி தலைவர்கள் மவுனமாக இருப்பதாகப் பிரதமர் மோடி விமர்சித்தார்.
 
			 
                    















