காங்கிரஸ் நாட்டின் பிரிவினைக்கு அடித்தளமிட்டது - பிரதமர் மோடி
Oct 31, 2025, 07:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

காங்கிரஸ் நாட்டின் பிரிவினைக்கு அடித்தளமிட்டது – பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Oct 31, 2025, 07:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் தனது கட்சியையும் அதிகாரத்தையும் ஆங்கிலேயர்களிடமிருந்து பெற்றது மட்டுமல்லாமல், அடிமை மனநிலையையும் உள்வாங்கியது எனப் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

குஜராத் மாநிலம், கெவாடியா பகுதியில் நடைபெற்ற சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாள் விழாவில் பேசிய பிரதமர் மோடி, சுதந்திரத்திற்கு பிறகு சர்தார் வல்லபாய் படேல் 550க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைக்கும் சாத்தியமற்ற பணியை மேற்கொண்டதாகப் புகழாரம் சூட்டினார்.

நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டதாகக் கூறிய அவர், நாட்டின் ஒற்றுமையைப் பலவீனப்படுத்தும் ஒவ்வொரு சிந்தனையையும் செயலையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

படேலின் மறைவுக்கு பிறகு அன்றைய ஆட்சியாளர்கள் நாட்டின் இறையாண்மையில் அக்கறை செலுத்தவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

மற்ற சமஸ்தானங்களைபோலக் காஷ்மீரையும் ஒன்றிணைக்க படேல் நினைத்ததாகவும், காங்கிரஸ் செய்த தவறால் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் சென்றுவிட்டதாகவும் கூறினார்.

370வது சட்டப்பிரிவை நீக்கியதால் காஷ்மீர் தேசியத்துடன் இணைந்ததாகக் கூறிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பயங்கரவாதிகளும் இந்தியாவின் உண்மையான சக்தியை உணர்ந்துள்ளனர் எனத் தெரிவித்தார்.

மேலும், வந்தே மாதரத்தின் ஒரு பகுதியை மத அடிப்படையில் காங்கிரஸ் நீக்கி நாட்டின் பிரிவினைக்கு அடித்தளமிட்டதாகக் குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, காங்கிரஸ் அந்தப் பாவத்தைச் செய்யாவிட்டால், இன்றைய இந்தியாவின் வரைபடம் வேறு மாதிரியாக இருந்திருக்கும் எனக் கூறினார்.

Tags: PM ModibjpCongressCongress laid the foundation for the division of the country - Prime Minister Modi
ShareTweetSendShare
Previous Post

திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் – எல்.முருகன்

Next Post

சுனாமியை ஏற்படுத்தும் ரஷ்யாவின் அணுசக்தி ட்ரோன் : அதிர்ச்சியில் அமெரிக்கா – அணுஆயுத சோதனை நடத்த உத்தரவு

Related News

பீகாரில் உள்ள பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவும் வழங்கப்படும் – NDA தேர்தல் அறிக்கை வெளியீடு!

தெருநாய் கடி விவகாரம் -தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

போபால் : மதுபோதையில் காவல்துறை அதிகாரியிடம் மருத்துவர் வாக்குவாதம்!

பாதுகாப்புத் துறையில் இந்தியா – அமெரிக்கா இடையே ஒப்பந்தம்!

பிரதம மந்திரி வித்யா லட்சுமி இணையதளம் வாயிலாக கல்விக்கடன் பெறுவதில் தமிழகம் முன்னணி!

மணிப்பூர் : தூக்கி எறிந்த பொருட்களை குப்பை தொட்டிகளாக மாற்றிய இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

சுனாமியை ஏற்படுத்தும் ரஷ்யாவின் அணுசக்தி ட்ரோன் : அதிர்ச்சியில் அமெரிக்கா – அணுஆயுத சோதனை நடத்த உத்தரவு

காங்கிரஸ் நாட்டின் பிரிவினைக்கு அடித்தளமிட்டது – பிரதமர் மோடி

திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் – எல்.முருகன்

புனிதர் போல நாடகம் போட முயற்சிக்கிறீர்களா முதல்வர் ஸ்டாலின்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

அற்ப அரசியலை ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் : அண்ணாமலை

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் செங்கோட்டையன் – இபிஎஸ் அதிரடி

ஐக்கிய அரபு அமீரகம் : வழியில் குறுக்கிட்ட பெண்ணுக்கு வழிவிட்ட பிரதமர்!

கனடாவில் இந்திய வம்சாவளி நபர் அடித்துக் கொலை!

வியட்நாம் : வெள்ளத்தில் தத்தளித்த சிறுவனுக்கு கை கொடுத்த ஊர் மக்கள்!

கிறிஸ்தவ கல்லறை தோட்டம் அமைக்க எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies