ஆப்கானிஸ்தானை மீண்டும் சீண்டினால் பாகிஸ்தான் பேரழிவைச் சந்திக்கும் எனத் தலிபான் உள்துறை அமைச்சர் சிராஜ் உத்தீன் ஹக்கானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான அமைதிப்பேச்சுவார்த்தை துருக்கியில் நடைபெற்று வரும் நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிராஜ் உத்தீன் ஹக்கானி, ஆப்கானிஸ்தானின் பொறுமையை சோதித்து பார்க்க வேண்டாம் என காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சிலர் தெரிந்தோ, தெரியாமலோ, நெருப்புடன் விளையாடுகிறார்கள். நாங்கள் போரை விரும்பவில்லை.
அதே வேளையில் எங்கள் பிராந்தியத்தை காப்பாற்றுவதற்கு எந்த எல்லைக்கும் செல்வோம் எனவும் சிராஜ் உத்தீன் ஹக்கானி கூறியுள்ளார்.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் காபூல் நதியில் உடனடியாக அணை கட்டும் திட்டத்தைத் தொடங்க தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
			 
                    















