நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குடியிருப்புக்குள் சிறுத்தை நடமாடிய காட்சி வெளியாகி உள்ளது.
கூடலூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை, புஞ்சவயல் கிராமத்தில் கால்நடைகளை வேட்டையாடி வருவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனால் வெளியே செல்ல அச்சமாக இருப்பதாகவும் உடனடியாகச் சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
 
			 
                    















