சீனா மீதான வரி 10 சதவீதம் குறைக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
தென்கொரியாவின் புசான் நகரில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அமெரிக்காவின் சோயா பீன்ஸை உடனடியாக வாங்க சீனா ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து சீனா மீதான வரியை 10 சதவீதம் குறைப்பதாக டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்தார்.
இதன் மூலம் சீனா மீதான வரி 57 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
 
			 
                    















