கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கில் 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் வேலுச்சாமி புரத்தில் கடந்த மாதம் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், வழக்கானது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
நேற்று விசாரணையை மீண்டும் தொடங்கிய சிபிஐ அதிகாரிகள், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.
பின்னர் 300 மீட்டர் தூரத்திற்கு 3டி லேசர் ஸ்கேனர் கருவி மூலமாக அளவிடும் பணிகளை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், 2-வது நாளான இன்று 10 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் மீண்டும் அளவீடு பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
















