சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழக தொண்டர் அணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சி தொண்டர்களின் பாதுகாப்பிற்காக தவெக தொண்டர் அணி உருவாக்கப்பட்டுள்ளது. தொகுதிக்கு 2 பேர் வீதம் 234 சட்டமன்ற தொகுதிகளில் 468 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என்ற அடிப்படையில் தலா 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பனையூரில் தவெக தொண்டர் அணியின் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் பொதுசசெயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில், தவெக தேர்தல் பிரச்சார பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா,கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
















