ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் லாரிமீது சுற்றுலா வாகனம் மோதிய விபத்தில் 18 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராஜஸ்தானின் பலோடி பகுதியைச் சேர்ந்தவர்கள், பிகானீரில் உள்ள கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வேனில் திரும்பிக் கொண்டு இருந்தனர்.
அப்போது ஜோத்பூரின் பாரத்மாலா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நின்றுகொண்டிருந்த லாரிமீது மோதியது.
இந்தக் கோர விபத்தில் 18 பேர் உயிரிழந்த நிலையில், பலரும் வேனுக்குள் சிக்கி படுகாயமடைந்தனர்.
பின்னர், அருகிலிருந்தவர்கள் வேனில் சிக்கி இருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தக் கோர விபத்து தொடர்பாகப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















