பீகார் மாநிலம், பாட்னாவில் புகழ்பெற்ற தக்த் ஸ்ரீ ஹரிமந்திர் ஜி பாட்னா சாகிப்பில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.
பீகார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகச் சீக்கியர்களின் புனித மையங்களில் ஒன்றான தக்த் ஸ்ரீ ஹரிமந்திர் ஜி பாட்னா சாகிப்பில் அவர் வழிபாடு செய்தார்.
சீக்கியர்கள் போலவே, தலையில் டர்பன் கட்டிக்கொண்டு அங்கு வந்த பிரதமர் மோடி, தரையில் மண்டியிட்டு மனதார வணங்கினார்.
















