ஆர்ஜேடி நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் தனது பேரப்பிள்ளைகளுடன் ஹாலோவீன் திருவிழாவைக் கொண்டாடியதை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
பீகாரில் உள்ள 243 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வரும் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
இதில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸின் இண்டி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த உச்சகட்ட பரபரப்பு சூழலுக்கு மத்தியில், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் தனது பேரக்குழந்தைகளுடன் ஹாலோவீன் கொண்டாடியது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
லாலு பிரசாத் யாதவின் மகள் ரோஹினி ஆச்சார்யா இதுகுறித்த காட்சிகளைத் தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
இதனை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்த பாஜக, இந்த லாலுபிரசாத் யாதவ் தான் சில நாட்களுக்கு முன்னர் மகா கும்பமேளா என்ற மத நம்பிக்கை சார்ந்த விழாவை அர்த்தமற்றது எனக்கூறி அவமதித்தார் எனத் தெரிவித்துள்ளது.
ஆனால், அவருக்கு ஆங்கிலேய திருவிழாவைக் கொண்டாடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் விமர்சித்துள்ளது.
















