உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெளிநாட்டுப் பண்டிகைகளையெல்லாம் கொண்டாடும் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு, அயோத்தி ராமர் கோயிலை பார்க்க நேரமில்லை எனப் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
பீகாரில் தேர்தல் பரப்புரையின் போது பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ராமருடன் ஏதேனும் பிரச்னை இருந்தால், அயோத்தியில் உள்ள மற்ற கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்யுமாறு ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சியினரை வலியுறுத்தினார்.
மேலும், பீகாரில் நாளந்தா போன்ற பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டுவோம் எனக்கூறிய அப்போதைய காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சியினர், மத்தியில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோதும் அதற்கு வெறும் 20 கோடி மட்டுமே ஒதுக்கியதாகக் குறிப்பிட்டார்.
ஆனால், என்டிஏ கூட்டணி அரசு கடந்த 10 ஆண்டுகளில் இரண்டாயிரம் கோடிக்கும் அதிகமாக ஒதுக்கி ஒரு அற்புதமான வளாகத்தைக் கட்டியுள்ளதாகவும் கூறினார். தற்போது நாளந்தா பல்கலைக்கழகத்தில் 21க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் படிப்பதாகவும் பிரதமர் மோடி பெருமையுடன் தெரிவித்தார்.
















