கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என 306 பேருக்குச் சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பிவுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தவெகத் தலைவர் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கைச் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், வேலுச்சாமிபுரத்தில் ஆட்கள் கொள்ளளவு குறித்து துல்லியமாக அளவீடு செய்துள்ளனர்.
அந்தப் பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
தவெக கூட்டத்திற்கு அனுமதி வழங்கிய கரூர் நகரக் காவல் ஆய்வாளர் மணிவண்ணனிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், சம்பவத்தில் உயிரிழந்தோர், காயமடைந்தோர் மற்றும் கூட்டத்திற்கு அழைத்துச் சென்ற தவெகவினர் என 306 பேருக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனச் சம்மன் அனுப்பியுள்ளனர்.
















