தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் 100-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர்.
சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் ஒற்றுமை யாத்திரைப் பேரணி நடைபெற்றது.
கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலத்தில் தொடங்கிய பேரணியானது காந்தி மைதானத்தில் நிறைவடைந்தது.
பேரணியில் பாஜகவினர் தேசிய கொடியைக் கையில் ஏந்தி பாரத் மாதா கி ஜே என்றும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்க என்றும் முழக்கங்கள் எழுப்பினர்.
			















