பூமிக்கடியில் அணு ஆயுதச் சோதனைகளை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த குற்றச்சாட்டைச் சீனா மறுத்துள்ளது.
சீனா உள்ளிட்ட நாடுகள் பூமிக்கடியில் அணு ஆயுதச் சோதனைகளை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் டிரம்ப்பின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துச் சீன வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற தனது கொள்கையில் சீனா உறுதியாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதச் சோதனைகளுக்காக தானாக விதித்துக்கொண்ட தடையைச் சீனா பின்பற்றி வருகிறது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், உலகளாவிய அணு ஆயுதச் சோதனைகள் மீதான தடையையும், அணு ஆயுதப் பரவல் தடுப்பு முறையையும் பாதுகாப்பதற்கான உறுதிமொழிகளை அமெரிக்கா உண்மையுடன் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் சீனா வலியுறுத்தியுள்ளது.
			















